Recents

How to fix Kinemaster Video layer problem in Tamil

 

How to fix Kinemaster Video layer problem in Tamil



Kinemaster Video layer problem

Kinemaster Video layer problem கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனில் லேயரில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் அதை எப்படி மீடியாவாக மாற்றுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Kinemaster Video layer problem

முதலில் உங்கள் கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்த பிறகு முகப்பு திரையில் கீழே செட்டிங்ஸ் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் மூன்றாவதாக Device Capability Information என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் மொபைலுக்கு என்னென்ன பார்மட் சப்போர்ட் ஆகும் என்பதை இங்கு நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி உங்கள் கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷன் மூலம் எடிட் செய்யும் வீடியோவை எந்த குவாலிட்டியில் நீங்கள் எக்ஸ்போர்ட் செய்ய முடியும் என்பதை கொடுத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் அதிகமான வீடியோ லேயர் எவ்வளவு சேர்க்க முடியும் என்பதையும் கொடுத்திருப்பார்கள். நாம் இப்போது லேயரில் உள்ள இமேஜில் எப்படி மீடியா என்று மாற்றுவது என்று பார்க்கலாம்.


Device Capability Information என்பதை கிளிக் செய்த பிறகு மேலே மூன்று புள்ளி கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

அதை கிளிக் செய்தவுடன் அனாலிசிஸ் நவ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்த பின்னர் ரிமைன் மி லேட்டர் மற்றும் ரன் அனாலிசிஸ் நங் என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ரன் அனாலிசிஸ் நவ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் அதைத் தேர்வு செய்த பின்னர் உங்கள் மொபைலுக்கு என்னென்ன பார்மட் சப்போர்ட் ஆகும் என்பதை அது உங்களுக்கு காட்டும்.

அதுமட்டுமின்றி லேயரில் இமேஜ் என்று இருந்தால் வீடியோவாக மாற்ற முடியுமா என்பதையும் உங்களுக்கு காட்டும்.

நீங்கள் ரன் அனாலிசிஸ் நவ் என்பதை கிளிக் செய்த பிறகு இரண்டு முதல் மூன்று நிமிடம் காத்திருக்க வேண்டும்.

வேற எந்த அப்ளிகேஷனை திறக்கக்கூடாது. இதில் நீங்கள் காத்திருக்க வேண்டும். ரன் அனாலிசிஸ் நவ் முடிந்த பிறகு நீங்கள் போய் பார்க்கலாம் லேயரில் இமேஜ் என்று இருந்தால் மீடியாவாக மாறிவிடும்.

click here for templates  for get templates 

இந்த முறையை நீங்கள் கையாளும் பொழுது உங்கள் மொபைலில் இமேஜ் என்று இருந்தால் வீடியோவாக மாறிவிடும் என்று நான் சொல்லவில்லை.

இந்த முறையை பயன்படுத்தி அதிகமான மொபைலுக்கு இமேஜ் இருந்த இடத்தில் மீடியாவாக மாறியுள்ளது. இதை நீங்களும் பயன்படுத்தி பார்க்கலாம். இந்த முறை உங்களுக்கு பயன்பட்டது என்று நீங்கள் கருதினால் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் மற்றும் இந்த கட்டுரை தொடர்பான கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.

Post a Comment

0 Comments